இன்னும் அந்த கியூட்னஸ் உங்ககிட்ட அப்படியே இருக்கு… வைரலாகும் நடிகை மீனாவின் டான்ஸ் வீடியோ… குவியும் லைக்ஸ்கள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா.  ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

   

தனது குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா.

தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  தற்போது இவர் ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் jodi are you ready என்ற நடன நிகழ்ச்சிக்கு நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மீனா. இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இவ்ளோ கியூட்டா இருக்கீங்களே..? என்று லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)