ஏழுமலையானே காப்பாத்து… மனைவியுடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ஜெயம் ரவி… ஓ இதுதான் விஷயமா..? 

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘பொன்னியின் செல்வன் , பொன்னியின் செல்வன் 2’  திரைப்படங்களில் நடித்த்திருந்தார். கலவையான விமர்சனம் இப்படத்திற்கு இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் பல கோடி வசூலை அள்ளியது. இவைகளை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி  இறைவன், சைரன் போன்ற திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சைரன் படத்தின் ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, அடுத்தடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது மனைவியுடன் திருப்பதி சென்றுள்ளார் ஜெயம் ரவி. திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சைரன் படம் குறித்து பேசிய அவர், தனது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்டையும் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அதனை தவிர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ….