Categories: சினிமா

அப்படித்தானா நடத்துனீங்க.. உண்மைய ஒத்துக்கோங்க.. சீனுராமசாமியை நேரடியாக தாக்கி பதிவை வெளியிட்ட மனிஷா யாதவ்.. சூடுபிடிக்கும் விவகாரம்…

Spread the love

தமிழ் சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை மனிஷா யாதவ். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/19  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. அடுத்ததாக தமிழில் இவர் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், கொஞ்சம் விமர்சனங்களையும் பெற்றார். அதன் பிறகு ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028, ஒரு குப்பை கதை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.  நடிகை மனிஷா யாதவ் தொழிலதிபரான வர்னித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது நடிகை மனிஷா யாதவை இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரை பற்றி சினிமாவில் பல வருடங்களாக பத்திரிகையாளர் இருக்கும் பிஸ்மி அவர்கள் ‘ சீனு ராமசாமியின் உண்மையான முகம் பலருக்கும் தெரியாது. அவர் இயக்கிய ஒரு படத்தில் மனிஷா யாதவ் நடித்தார். அவருக்கு சீனு ராமசாமி கொடுத்த பாலியல் தொந்தரவால் இந்த படமே வேண்டாம் என ஓடிவிட்டார்’ என கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த சீனுராமசாமி ‘ஒரு சினிமா விழாவில் மனிஷா யாதவ் அவருக்கு நன்றி சொன்ன வீடியோவை பகிர்ந்திருந்தார். ‘தப்பு நடந்தால் எப்படி எனக்கு அவர் நன்றி சொல்வார்?’ என்ற ரீதியில் அவர் இந்த விடியோவை பகிர்ந்து விளக்கம் அளித்திருந்தார்.  இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ் ‘ ஓ காதல் கண்மணி படம் தொடர்பான விழா மேடையில் அவர் கொடுத்த பரிசுக்கு நன்றி சொன்னேன்.

அது எல்லோருக்கும் சொல்வதுதான். அதனால் அவர் எனக்கு செய்தது எப்படி மாறும்? 9 வருடங்களுக்கு முன் அவரை பற்றி நான் என்ன சொன்னேனோ,  இப்போதும் அதில் உறுதியாக இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரின் இயக்கத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும்? சீனு ராமசாமி உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்’ என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

2 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

6 minutes ago

“கல்லறை மேலே தான் மாநகராட்சி அலுவலகம்… அட்டகாசம் செய்யும் பேய்கள்”… அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கிளப்பிய புது குண்டு.. அலறும் ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…

8 minutes ago

“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

10 minutes ago

விஜய்யின் வருகையால் யாருக்கு மரண அடி?… திராவிடக் கட்சிகளுக்கு ‘செக்’ வைத்த தளபதி: 50 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வருகிறதா..?

தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…

15 minutes ago

மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் AI… ​”ஒரே ஒரு பட்டன்.. மொத்த ஏஐ-யும் க்ளோஸ்!”… உலகையே அதிரவைத்த டிரம்பின் ‘கில் சுவிட்ச்’ திட்டம்…!!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…

17 minutes ago