தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன. இந்நிலையில், எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வந்தார் விஷால். இந்நிலையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டினர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷாலிடம் ,மேடையில் பெண் ஒருவர் ‘நீங்கதான சார் எனக்கு இன்ஸ்டா-ல என்ன பிடிக்கும்னு எனக்கு மெசேஜ் பன்னீங்க’ என கூறுகிறார். இவர் ஏற்கனவே நடிகர் அசோக் செல்வனை ப்ரொபோஸ் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு நடிகர் விஷால் நான் இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் இது போன்ற எந்த சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவது கிடையாது. இதற்கென்று ஒரு தனி குரூப் இருக்கின்றனர்.
அவர்கள் நான் சொல்லும் மெசேஜ்களை பதிவு செய்து விடுகின்றனர் என கூற, மேலும் தன்னுடைய பெயர் ‘ஸ்ரீ ரெட்டி’ என்றும் அந்தப் பெண் கூறுகிறார். மேலும் விஷால் ‘அவங்க என்னமா மெசேஜ் பண்ணாங்க? என்று கேட்க, ‘என்ன ரொம்ப புடிக்கும்’ மெசேஜ் பண்ணாங்க, என்று அவர் கூற ‘இருமா இந்த ஷோ முடிஞ்சதும் அவங்கள என்னன்னு கேட்கிறேன்’ என்று நடிகர் விஷால் கூறுவது போல இந்த வீடியோ முடிந்துள்ளது. தற்போது இந்த வீடியோ உண்மை இல்லை என்றும், படத்தின் ப்ரோமோஷன் வீடியோ என்றும் கூறப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…