திருமணத்திற்கு விதை போட்ட ரஜினி.. குரு சொன்ன ஒத்த வார்த்தையால் வெளிநாட்டவரை கரம்பிடித்து 90s நடிகை மாதவி..

By Nanthini on மார்கழி 6, 2023

Spread the love

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை மாதவி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான தில்லுமுல்லு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம் மற்றும் காக்கிச்சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார்.

   

அந்த காலகட்டத்தில் பிகினி காட்சிகளில் தயங்காமல் நடித்த முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் உச்சத்தில் இருந்த மாதவிக்கு வயது ஏறியதும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த மாதவி தன்னுடைய நெருங்கிய நண்பரான ரஜினியிடம் ஆலோசனை கேட்ட நிலையில் ரஜினி இமயமலையில் உள்ள தன் குரு ஒருவரை சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

   

 

உடனே மாதவி இமயமலை சென்று அவரை பார்க்க அந்த குரு மாதவியை திருமணம் செய்து கொள்ள கூறினார். அதுவும் அங்கே வந்திருந்த ஒரு வெளிநாட்டு பக்தரை திருமணம் செய்து கொள்ள அவர் கூறினார். திருமணத்திற்கு பிறகு 30 ஆண்டுகள் உன்னால் இந்தியாவுக்கு வர முடியாது எனவும் குரு கூறியுள்ளார். அவரின் வார்த்தையை நம்பி அந்த வெளிநாட்டு நபரை மாதவி திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற நிலையில் அங்கு கணவரும் தொழிலில் வெற்றியடைய மாதவி குடும்பத்தை கவனித்துக் கொள்ள இவருக்கு மூன்று மகள்களும் உள்ளனர். இன்றும் ரஜினியுடன் மாதவி நல்ல நட்பில் இருந்து வருகின்றார்.