Categories: சினிமா

அள்ளிக்கொடுக்கும் வள்ளல் MGR-க்கே 30 லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய நடிகை.. பலரும் அறியாத தகவல்..

Spread the love

மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என பல அடையாளங்கள் எம்ஜிஆருக்கு உண்டு. சமீபத்தில் காலமான நடிகர் விஜயகாந்தை, கருப்பு எம்ஜிஆர் என குறிப்பிடக் காரணம், எம்ஜிஆரிடம் இருந்த மிகச்சிறந்த குணங்கள் அவரிடம் இருந்ததால்தான். குறிப்பாக பசியால் வாடுபவர்களுக்கு உடனடியாக உணவு வழங்குவது, எப்போதும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தருவது. உதவி என யார் வந்தாலும் உடனே உதவுவதுதான் விஜயகாந்த் குணம். அது புரட்சித்தலைவரிடம் இருந்து தான் அவர் கற்றுக்கொண்டார்.

ஒருமுறை யாரோ ஒருவர் காரில் சென்ற போது, ரோட்டோரத்தில் இருந்த ஒரு பாட்டியை பார்த்து பரிதாபப்பட்டு, காரை நிறுத்தி அவரை அழைத்து பணம் கொடுத்திருக்கிறா். அவரிடம் பணம் வாங்கிய அந்த பாட்டி, அவரை எம்ஜிஆர் எனக்கு பணம் கொடுத்தார் என மற்றவர்களிடம் சொன்னாராம். இப்படி ஒருவர் உதவினாலே, அவர் எம்ஜிஆராக தான் இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு உதவியவர்தான் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். அப்படிப்பட்ட எம்ஜிஆருக்கே ஒரு நடிகை ரூ. 30 லட்சம் பணம் கொடுத்து உதவியிருக்கிறார் என்றால், அது ஆச்சரியம் தருகிற விஷயம்தான்.

அவர் வேறு யாருமல்ல. எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த நடிகை லதா. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை லதா கூறியதாவது, நான் 15 வயதில் நடிக்க வந்ததற்கு காரணம் எம்ஜிஆர்தான். அவர்தான் என் அம்மாவிடம் பேசி சம்மதிக்க வைத்து, 5 ஆண்டு ஒப்பந்தத்தில் என்னை அவருடன் பல படங்களில் நடிக்க வைத்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1977ம் ஆண்டில் சாகுந்தலம் டான்ஸ் டிராமா மூலம், தமிழ்நாடு முழுவதும் நான் டிராமாவில் நடித்தேன்.

இதில் மொத்தம் 35 லட்சம் ரூபாய் வசூலானது. டிராமாவை நடத்தியவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், எம்ஜிஆருக்கு தேர்தல் நிதியாக 30 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். அந்த காலகட்டத்தில் அது பெரிய தொகை. அதை என் பாக்கியமாக, பெருமையாக கருதுகிறேன். ஆனால், இதை எம்ஜிஆர் எப்போதும் மறக்கவில்லை. அப்போதும் என்னை அரசியலுக்கு அழைத்தார். 1986ல், என் அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும் நலம் விசாரிக்க வந்த அவர், இப்போது கூட வா, என அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான்தான் போகவில்லை, என கூறியிருக்கிறார் நடிகை லதா.

admin

Recent Posts

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

3 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

9 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago