மோனிகா சொல்றது சுத்த பொய்…. யாரும் நம்பாதீங்க…. இமானின் முன்னாள் மனைவி குறித்து குட்டி பத்மினி பகிர் பேட்டி…!!!

By Mahalakshmi on ஐப்பசி 22, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த பேட்டியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது குறித்து இமான் அவர்களின் முன்னாள் மனைவி youtube ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அது குறித்து நடிகை குட்டி பத்மினி விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்துவிட்டு அமலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

   

தனது முதல் மனைவி மோனிகாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அண்மையில் இசையமைப்பாளர் இமான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை நான் மன்னிக்க மாட்டேன். இனி அவருடன் சேர்ந்து படம் செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இமான் அவர்களின் முன்னாள் மனைவி மோனிகா விவாகரத்துக்கு காரணம் சிவகார்த்திகேயன் கிடையாது.

   

 

அவர் ஒரு ஜென்டில்மேன் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. இமான் தனக்கு ஜீவனாம்சம் கூட கொடுக்கவில்லை. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியுடன் அவருக்கு முன்பே பழக்கம் இருந்தது. ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பின்னரே தனக்கு விவாகரத்து கொடுத்தார் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து குட்டி மத்மினி இசையமைப்பாளர் இமான் பற்றி பேசியதற்கும், இமானின் முன்னாள் மனைவி மோனிகா பற்றி பேசியதற்கும் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதில் மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை ஈமான் கொடுத்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான்தான் பார்த்து வருகிறார். இமான் மற்றும் அவருடைய தந்தையும் தனது வீட்டிற்கு வந்து இருந்தனர். அப்போது நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பற்றி தன்னிடம் பகிர்ந்தார்கள் என்று கூறி இருந்தார்கள். மேலும் திருமணத்திற்கு முன்பே அமலியுடன் இமான் பழகி வந்தார் என்று கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்த பின்னர் தான் அவருடன் பேசி பழகி வந்தார் என்று குட்டி பத்மினி தெரிவித்திருக்கிறார்.