எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலங்களில் தொடங்கி ரஜினி கமல் காலங்கள் வரை வில்லனாக பல நடிகர்களை மிரட்டிக் கொண்டிருந்த செந்தாமரையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. செந்தாமரையின் மாஸ் வசனம் மற்றும் அவருடைய முக பாவனை அப்படியே பார்த்ததும் இரண்டு போகும் வகையில் தான் இருக்கும். அவர் நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் செந்தாமரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லன் நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்த செந்தாமரை முதலில் மேடை நடிகராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

இவர் நடித்ததில் மலையூர் மம்பட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, குரு சிஷ்யன் போன்ற திரைப்படங்கள் இவருடைய வேறு முகத்தை வெளிக்கொண்டு வந்து காட்டியது. ரஜினியின் நெருங்கிய நண்பனாக இருந்த இவர் ரஜினியுடன் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் செந்தாமரை தன்னுடைய 57ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். இவருடைய மனைவி தான் பழம்பெரும் நடிகை கௌசல்யா. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய கணவர் பற்றி நடிகை கௌசல்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், செந்தாமரையுடன் இணைந்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. அதன் பிறகு எனக்கு 35 வயதில் கேன்சர் வந்துவிட்டது. அன்றைய காலத்தில் என் வீட்டில் எல்லா வசதியுமே இருக்கும். தெரு விளக்கு இல்லை என்றால் கூட நாங்கள் உடனே போட்டு விடுவோம். எந்நேரமும் எங்கள் வீட்டில் ஃபோன் இருந்து கொண்டே இருக்கும்.

சின்ன வயசுலயே எனக்கு கேன்சர் வந்துவிட்டதால் ஷூட்டிங் செல்லும் என்னுடைய கணவர் நான் எப்படி இருக்கிறேன் என்று நலம் விசாரிப்பதற்காக லேண்ட்லைன் போனுக்கு தான் போன் பண்ணுவார். அதனால் எவ்வளவு மழை புயல் அடித்தாலும் லேண்ட்லைன் வைத்திருக்க வாங்க எங்க வீட்டுக்கு வந்துருவாங்க. என் மனைவிக்கு உடம்பு சரியில்ல அவங்கள நலம் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அவங்களை எங்க வீட்டுக்கு வர வச்சுருவாரு. என்னுடைய கணவர் பெருசா எதுவும் செய்யவில்லை என்றாலும் சின்ன சின்ன விஷயத்தை கூட பார்த்து பார்த்து பண்ணாரு என்று எமோஷனலாக பேசியுள்ளார்.
