கொன்ஜம் ஹாட்… நெறய கியூட்.. வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By Begam on சித்திரை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

   

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

   

 

சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

இவர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில்  ‘சைரன்’ திரைப்படத்தில்  நடித்திருந்தார்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதே நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அந்த வகையில் இவர் தனது instagram பக்கத்தில் சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.