கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான புது பூவே திரைப்படத்தின் மூலம் சினேகன் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர் நடிகர் என சினேகன் புகழ்பெற்றார். பிக் பாஸ் முதல் சீசனில் சினேகன் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
அமீர் இயக்கிய யோகி படத்தின் மூலம் சினேகன் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இவர் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். சின்னத்திரை நடிகை ஆன கன்னிகாவை சினேகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கன்னிகா பிரபல கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரிய குறி சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் பிரபலமான கல்யாண வீடு சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னிகா சினேகன் தம்பதியினர் ஹேர் ஆயில் பிசினஸை தொடங்கி உள்ளனர். நடிப்பு மட்டுமில்லாமல் ஓவியம் வரைவதிலும் கன்னிகாவுக்கு ஆர்வம் அதிகம்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அவ்வபோது தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இந்நிலையில் கன்னிகா தான் வரைந்த ஓவிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.