கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாக்கியலட்சுமி’ செல்வி… என்ன ஆச்சு இவங்களுக்கு.. பதறிப்போன ரசிகர்கள்..

By Begam on மாசி 14, 2024

Spread the love

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரிய தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. TRP யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

   

இந்த சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கம்பன் மீனா.  இந்த சீரியலில் இவர் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார் . பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார் நடிகை கம்பம் மீனா. இவர் இந்த சீரியலில் மட்டுமின்றி நிறைவடைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

 

இந்நிலையில் நேற்று விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்த அவர் கை முறிந்து கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில், ‘ நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)…..எல்லாம் அவன் செயல்’ என கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…