46 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து… ரசிகர்களை கதிகலங்க வைத்த ஜோதிகா… தீயாய் பரவும் வீடியோ…

By Begam on பங்குனி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

   

தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய பல  மொழிகளிலும் ஜோதிகாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

 

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் கடந்த 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதை தொடர்ந்து கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

Jyothika

தற்பொழுது மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக நடிகை ஜோதிகா ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜோதிகா.

தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில் தற்பொழுது அவர்  கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)