பிரபல நடிகரான விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக ஜெயசுதா நடித்துள்ளார். அப்பாவாக சரத்குமார் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் ஜெயசுதா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஜெயசுதா ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்பு வராததால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ஜெயசுதாவின் இரண்டாவது கணவர் நிதின் கபூர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜெயசுதா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் ஹீரோயின் ஆக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது ஒரு சிறிய ஈர்ப்பு இருந்தது. அது காதலா ஈர்ப்பா என்பது தெரியவில்லை. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது அதிக கிரஷ் இருந்தது.

அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். பல நாட்கள் கனவு கண்டேன். ஆனால் அந்த ஈர்ப்பு திருமணம் வரை செல்லாது என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். பின்னர் நான் ஒரு பாடகரையும் காதலித்தேன். இம்ரான் கானை போல அவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கனவு கண்டேன். ஆனால் சில வருடங்களில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்ததால் இனி எதுவும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

