சத்யராஜ் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு மாமன் மகள் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, மனோரமா, பிரபல நடிகை ஜெயசித்ரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், கவுண்டமணி, ஜெயசித்ரா ஆகியோர் இணைந்து நடிக்கும் ஒரு சீன் வரும்.
அந்த சீனில் ஏற்கனவே ராஜலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த ஜெயசித்ராவுக்கு உண்மை தெரிந்ததால் கவுண்டமணி ரீல் அறிந்து போச்சு என்ற வசனத்தை பேசுவார். அந்த காட்சிகள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. சமீபத்தில் நடிகை ஜெயசித்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, மாமன் மகள் திரைப்படத்தில் ரீல் அறுந்து போச்சு சீனை எடுக்கும்போதே நாங்கள் சிரித்தோம்.
மேனேஜர் எனக்கு கால் பண்ணி அடுத்த நாள் ஷூட்டிங் இருக்குன்னு சொன்னார். அப்போது நான் லண்டனில் இருந்தேன். நான் லண்டனில் இருந்தது யாருக்கும் தெரியாது. சத்யராஜ் பச்சை நிற புடவையில் என்னை பார்த்து மீனாட்சி மாறி இருக்கீங்க என கூறுவார். ஷூட்டிங்கிற்காக லண்டனில் இருந்து புறப்பட்டு வந்தேன். அவர்கள் செய்யும் லூட்டிகளை மறந்து விட்டு சீனில் நடிக்க வேண்டும். படத்தை தியேட்டரில் பார்க்கும்போது அப்படி சிரிப்பு வரும்.
மாமன் மகள் திரைப்படத்தை மிகவும் ரசித்து நடித்தேன். கவுண்டமணி கடந்த வாரம் கூட என்னை பார்த்தார். அவர் மீண்டும் எப்போது நடிக்கிறீர்கள் என்று கூட என்னிடம் கேட்டார். நாங்கள் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தை ரசித்து நடிப்போம். மாமன் மகன் படத்தில் நடிக்கும் போது நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது என தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.