Connect with us

பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக களமிறங்கிய மைக் மோகன்.. ‘ஹரா’ படம் எப்படி இருக்கு..? முழு விமர்சனம் இதோ..!

CINEMA

பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக களமிறங்கிய மைக் மோகன்.. ‘ஹரா’ படம் எப்படி இருக்கு..? முழு விமர்சனம் இதோ..!

14 ஆண்டுகளுக்குப் பின்  மோகன் ஹீரோவாக நடித்த ஹரா திரைப்படத்தின் முழு விமர்சனம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகராக வெள்ளிவிழா நாயகனாக கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஹரா. விஜய் ஸ்ரீ இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக மோகன் நடிக்க அனுமோல், ஷாருக்கான், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில் ராம் என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு அப்பாவாக நடித்திருக்கின்றார்.

   

மகள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவருடைய இறப்பிற்கான காரணம் என்ன என தெரியவில்லை. இதை கண்டுபிடிப்பதற்கு மோகன் தன்னுடைய பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றிக் கொண்டு பின்னர் மகள் இறப்புக்கு காரணமானவரின் தேடி கண்டுபிடிக்கின்றார்.

 

அவர்களைத் தேடி தன் மகளை கொன்றவர்களை மோகன் கொன்றாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ஹீரோவாக திரை முழுவதும் மைக் மோகன் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களை திருப்தி படுத்த முடியவில்லை.

தான் இறந்து விட்டதாக உலகை நம்ப வைத்து வேறு ஒரு பெயரில் தன் மகளை கொன்றவரை கண்டுபிடிக்க சுற்றிக் கொண்டிருக்கின்றார். பெயர் மாற்றம் தவிர வேறு எந்த அடையாளத்தையும் அவர் மாற்றவில்லை. அதில் ஒரு லாஜிக் குறைபாடு இருந்தது. தலையை சுற்றி மூக்கை தொட்ட கதையாக தான் இந்த படம் இருந்தது.

எந்த ஒரு ஆக்ஷன் திரில்லர் பானியர் இல்லாமல் கதை பொறுமையாக நகர்ந்து கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கிடையே சற்று தொய்வை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் பல வருடம் கழித்து மோகன் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். சமூகத்திற்கு ஒரு மெசேஜ் கொடுக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கின்றார். அதைக் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கிளைமாக்ஸ்-ல் ஒரு சிறிய ட்விஸ்ட் இருந்தது, அதுதான் படத்திற்கு சிறிய ஆறுதல் என்றே கூறலாம். மொத்தத்தில் மோகன் அவர்களின் ஹரா திரைப்படம் சுமார் என்ற பதிவையே பெற்றிருக்கின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top