மாடர்ன் ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கும் விஜய் டிவி ஜாக்குலின்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam on ஆவணி 14, 2023

Spread the love

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நடிகை ஜாக்குலின்.கடைசியில் விஜய் டிவியில் சேர்ந்தார் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

   

இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னேறினார். தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’  சீரியலில்  கதாநாயகியாக நடித்து  பிரபலமடைந்தார்.

   

 

மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் ”கோலமாவு கோகிலா”படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகும் ‘கிவி’ படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஜாக்குலின். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஜாக்குலின். தற்பொழுது இவரின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரபட்டு வருகிறது.