நா பிக் பாஸ் பாத்துருக்கான்.. பிக் பாஸ்ல நிஜமாவே அப்படி பண்ணுவீங்க..? லியோ ஷூட்டிங்கில் ஜனனியிடம் நடிகர் விஜய் கேட்ட ஆச்சர்ய கேள்வி..

By admin on கார்த்திகை 3, 2023

Spread the love

நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆகி, நேற்று முன்தினம் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். லியோ ரிலீஸ் ஆன 12 நாட்களில், ரூ. 540 கோடியை வசூலில் கடந்திருப்பது, மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.actress Jananiலியோ படத்தில், பார்த்திபன் என்ற கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். அவர் நடத்தும் காபி ஷாப்பில், பிக்பாஸ் ஜனனி, பணிபுரியும் ஊழியராக நடித்திருப்பார். இலங்கையை சேர்ந்த ஜனனி, அங்குள்ள டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். மக்கள் மத்தியில் அதிக பிரபலமான அவர், விஜய் டிவியில் கடந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அன்று முதல் பிக்பாஸ் ஜனனி என அழைக்கப்படுகிறார். லியோ படத்தில், அவர் நடித்திருந்தார். நடிகர் விஜய் உடன் பணிபுரிந்த அனுபுவம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருக்கிறார் பிக்பாஸ் ஜனனி.actress Jananiநடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக அமைதியாக இருப்பார். நானும் அவரும் நடித்த காட்சி முடிந்துவிட்ட நேரத்தில், என்னுடன் அவரே வந்து பேசுவார். அப்போது, பிக்பாஸ் வீட்டில் நிஜமாகவே சண்டை போட்டுக்குவீங்களா என ஆச்சரியமாக கேட்டார். முதலில் கொஞ்சநாள் பிக்பாஸ் பார்த்தேன்.

நேரம் கிடைத்தால் பார்ப்பேன் என்றும் கூறிய அவர், என்னை பற்றி அக்கறையாக விசாரித்தது மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. அவரது மகன், மனைவி பற்றி எல்லாம் என்னிடம் சகஜமாக கூறுவார். அவருடன் இருப்பதே ஜாலியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் பிக்பாஸ் ஜனனி.