என்னது.., விஜயுடன் ‘நெஞ்சினிலே’ படத்துல நடிச்ச இந்த நடிகை சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்தில் நடிச்சிருக்காங்களா..?

By Mahalakshmi on தை 14, 2024

Spread the love

90’s ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வரிசையில்  90 கிட்ஸ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை இஷா கோபிக்கர் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#image_title

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘காதல் கவிதை’  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இஷா கோபிக்கர். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே தெலுங்கு சினிமா துறையில்  முன்னணி நடிகரான நாகராஜன் ஜோடியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். அதன்பின்னர், தமிழ் சினிமாவில்  ‘என் சுவாச காற்றே’, ‘நெஞ்சினிலே’, ‘நரசிம்மா’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

   
   

 

தமிழ் படங்கள் குறைவாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வந்தார்.  தனக்கென சினிமா துறையில் இடத்தை பதித்து  ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் நடிகை இஷா பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இவர் சல்மான்கான், அக்ஷய்குமார்,  சுனில் செட்டி போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். நடிகை ஈஷா கோபிக்கர்  தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். திரைத்துறையில் டாப் 10 நடிகையாக வலம் வந்த ஈஷா தொழிலதிபர் திம்மி நரங்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும்  பல படங்களை  நடித்துள்ளார்.

அதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 14 வருடத்திற்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து இல்லற வாழ்வில் இருந்து பிரிந்தார். விவாகரத்திற்கு பிறகு தனது மகளுடன் தனியாக வசித்து வந்த இஷா திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி  கொடுத்திருக்கிறார்.

தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “அயலான்”  திரைப்படத்தில் நடிகை இஷா கோபிக்கர் நடித்துள்ளார்.  இந்நிலையில் இஷாவின் சமீப புகைப்படங்கள் வெளியாகி  அவரின் ரசிகர்கள் மூலம் இணையத்தில்  பரவி வைரலாகி வருகிறது.