தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா நடித்த திரைப்படம் ‘கீதாஞ்சலி’. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் ’இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது . இந்த படத்தால் நடிகை கிரிஜாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கிரிஜா நடித்தார். 2003 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அங்கு அவர் பத்திரிகையாளராக பணியாற்றியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பற்றிய எந்த தகவல்களும் இணையத்தில் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்பொழுது அவரின் சமீபத்திய புகைப்படமும், அவரை பற்றிய தகவல்களும் நமக்கு தெரிந்துள்ளது. அதன்படி, இவர் தற்போது லண்டனில் மிகப்பெரிய எழுத்தாளராக பணியாற்றி வருவதாகவும், அங்குள்ள பிரபல பத்திரிகைக்கு கட்டுரை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் தற்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கம்பேக் கொடுத்திருக்கிறார்.
அதாவது, இவர் ‘இப்பனி டப்பிடா இலியாலி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.தற்பொழுது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…