சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார்.
நேற்று முன்தினம் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை அவரது கணவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருந்தார். தற்பொழுது புதிதாக பிறந்த தனது தங்கையின் கால்களை முத்தமிட்ட படியும், கை விரல்களை பிடித்த படியும் காயத்ரியின் மகன் கொஞ்சும் கியூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…