புகழின் உச்சத்தில் இருந்த போதே தற்கொலை.. பிரபல நடிகர் மேல் கொண்ட காதலால் திசைமாறிய ஃபடாபட் ஜெயலட்சுமியின் வாழ்வு..

By vinoth on பங்குனி 1, 2024

Spread the love

இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்த நடிகைகள் எவருமே ஜொலிக்காமல் போனதில்லை. அப்படி அவரால் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் படாபட் ஜெயலட்சுமி. அந்த படத்தில் அவர் படாபட் என்ற வசனத்தை அடிக்கடி கூறி அது கவனம் பெற்றதால் அதுவே அவரின் அடையாளமாகி படாபட் ஜெயலட்சுமி என ஆனது. ஆனால் இந்த படத்துக்கு முன்பே மலையாளத்தில் வின்செண்ட் இயக்கிய தீர்த்தயாத்ரா என்ற படத்தில் சுப்ரியா என்ற பெயரில் நடித்துள்ளார்.

தெலுங்கில் இருந்து வந்து தமிழ் நன்றாக பேசி நடித்த நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை படாபட் ஜெயலட்சுமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 66 படங்களில் நடித்து முக்கிய நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தவர்.  அவர் நடிப்பில் அவள் ஒரு தொடர் கதை, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் இன்றளவும் முக்கியமானப் படங்களாக விளங்குகின்றன. குறிப்பாக முள்ளும் மலரும் படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக வெகுளிப் பெண்ணாக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

   

அதே போல அப்போது உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், என்.டி.ஆர். சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் நீண்டகாலம் சினிமாவில் கோலோச்சுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அவரின் தற்கொலைக்குக் காரணம் அவர் பிரபல நடிகர் ஒருவர் மீது கொண்டிருந்த காதல்தான் என்று சொல்லப்பட்டது.

   

எம் ஜி ஆரின் அண்ணன் மகனும் நடிகருமான எம் ஜி சுகுமாரை காதலித்து வந்ததாகவும், தான் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் அவர் பெயருக்கே கொடுத்தாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சுகுமார் ஜெயலட்சுமி காதலில் ஏதோ பிரச்சனை ஏற்பட தன்னுடைய 22 ஆவது வயதிலேயே தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ஜெயலட்சுமி. இவரது மரணம் அப்போது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.