ஆரஞ்சு நிற உடையில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சீரியல்களில் நடித்த பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து இருந்த இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் ருத்ரதாண்டவம் .
இந்த திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
சமூக வலைதள பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது அவர் ஆரஞ்சு நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.