மகளுடன் ஹிட் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை தேவதர்ஷினி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..

By Begam

Published on:

‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் நடிகை தேவதர்ஷினி. ‘கனவுகள் இலவசம்’ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் ‘பார்த்திபன் கனவு ‘என்ற திரைப்படத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

   

இதைத்தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 ,அழகிய நீயே, சரவணா, தீபாவளி ,கிரீடம், வேல், சரோஜா,கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் நடித்த சக நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவர் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த காஞ்சனா 2 & 3, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இது போக விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை, ஷோவில் நடுவராக பங்கேற்றார்.

niyathi

தேவதர்ஷினி சேத்தன் தம்பதியினரின் மகள் நியதி. இவரும் தற்பொழுது ஹீரோயினாக களமிறங்கி கலக்கி வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நியதி. இவர்  தற்பொழுது தனது அம்மா தேவதர்ஷியுடன் தளபதியின் லியோ பட பாடலான நா ரெடி தான் வரவா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…