அடப்பிடித்து தேவயானியை அதற்கு சம்மதம் தெரிவிக்க வைத்த எஸ்.ஜே சூர்யா.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on சித்திரை 2, 2025

Spread the love

எஸ் ஜே சூர்யா சினிமாவில் முதலில் இயக்குனர் ஆசையில் தான் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் அவர் இயக்கிய அஜித்தின் வாலி திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு அவர் இயக்கிய குஷி திரைப்படம் விஜய் டிவி மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்த இரண்டு படங்களில் ஒரு சில காட்சிகளில் யாரும் பார்க்காத வகையில் எஸ் ஜே சூர்யா வந்து போய் இருப்பார். ஆனால் அவருக்குள் அதன் பிறகு நடிப்பு ஆசையும் வந்துவிட பல படங்களில் வித்தியாசமான ஒரு நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு வில்லனாகவும் நடித்து அசத்தினார் .

எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: நடிப்பை நேசிக்கும் நட்சத்திர இயக்குநர் | sjsuryah birthday special - hindutamil.in

   

அதில் குறிப்பிடத்தக்க படங்களாக வியாபாரி, நியூ மற்றும் ஆருயிரே ஆகிய திரைப்படங்களை சொல்லலாம். இதில் நியூ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 2004 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா கதை எழுதி தயாரித்து, நடித்து மற்றும் இயக்கிய திரைப்படம் தான் நியூ. அவருடன் இணைந்து இந்த படத்தில் சிம்ரன், மணிவண்ணன் மற்றும் தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

   

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா - Kalayil Dhinamum - YouTube

 

இந்த படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து நடிகை தேவயானி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.  அதில், நியூ படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தான் நான் முதலில் சொன்னேன். ஆனால் இல்ல நீங்க கதையை முதலில் கேளுங்கள் என்று சொல்லி பத்து நிமிஷத்துல எஸ் ஜே சூர்யா வீட்டுக்கு வந்துட்டாரு.

அடம்பிடிச்ச எஸ்.ஜே.சூர்யா... அதுக்கு சம்மதித்த தேவயானி...! அவரே சொல்லிட்டாரே..!

வீட்டுக்கு வந்துட்டு கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணி நடிச்சு நடிச்சு காமிச்சாரு. கடைசியா ஒரு வழியா நான் ஓகே சொல்லிட்டேன். தெலுங்குல தான என்று நினைத்து நானும் நடிச்சிட்டேன். தெலுங்கில் பார்த்துட்டு அவர் தமிழிலும் நீங்கதான் பண்ணனும் என்று ஒரே அடம். நான் எவ்வளவு சொல்லியும் என்கிட்ட கெஞ்சி கேட்டு ஒத்துக்க வச்சிட்டாரு என்று நடிகை தேவயானி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.