தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் ‘தொட்டால் சிணுங்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தனது குடும்ப பாங்கான முகத்தோற்றத்தாலும், தனது நடிப்பு திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. 2001ல் வீட்டை எதிர்த்து இவர்களது காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு தற்போது இனியா, பிரியங்கா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
வெள்ளிதிரையில் பட வாய்ப்புகள் குறையவே, இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் மிகப்பெரிய ஹிட் எடுத்தது. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து மிகப் பிரபலமானார் தேவயானி.சில வருடங்கள் சின்ன திரையை விட்டு விலகிய இவர், ‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கினார். தற்பொழுது வரை பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் தேவயானி.
இந்நிலையில், 49 வயதாகும் நடிகை தேவயானி தனது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிடுவாராம். Fast Foods அனைத்தையும் தவிர்த்துவிட்டு, அதிக காய்கறிகள் கொண்ட உணவு தான் சாப்பிடுவாராம். உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாம். அதிகளவு தேங்காய் எண்ணெய்யை தனது முகத்தில் பயன்படுத்துவாராம்.
அது தான் அவருடைய முகத்தின் பளபளப்பிற்கு காரணம் என்கின்றார். மேலும், தேவையில்லாத பொருட்களை முகத்தில் பயன்படுத்தமாட்டாராம். ஒரே ஒரு சோப் மற்றும் நீண்ட காலமாக ஓரே ஸ்கின் கேர் தான் பயன்படுத்தி வருகிறாராம். இதுமட்டுமின்றி தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தேய்த்தபின் தான் குளிப்பாராம். இவை தான் அவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் முகம் பளபளப்பாக இருக்க காரணம் என்று நடிகை தேவயானி கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியல் களத்தில்…
நடிகர் அஜீத்குமார் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக துபாயில் இருந்து வருகிறார். அங்கு தொடர்ந்து நடந்து வரும் கார் ரேஸில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்துப் பேசியதற்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான படம் டாணாக்காரன். போலீஸ் பயிற்சியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி…
நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த ஓரிரு…