பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியை அவருடைய கணவன் கோபி கொஞ்சம் கூட மதிப்பதில்லை.மேலும் ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் கோபி.
இதைத்தொடர்ந்து கோபிக்கும் ராதிகாவுக்கும் பாக்கியாவின் கண் முன்னே திருமணம் நடந்தது. கோபியின் அம்மா, அப்பா, குழந்தைகள் என மொத்த குடும்பமும் பாக்யாவின் பக்கமே உள்ளனர். தற்பொழுது ராதிகா முழுநேர வில்லியாக மாறி விட்டார். மேலும் இந்த சீரியலில் கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பாக்கியா கோபியையும் அவரது மனைவி ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியேற்றியும் விட்டார்.
தற்பொழுது இந்த சீரியலில் பாக்யா காலேஜுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். மறுபுறம் கேன்டீன், இங்கிலிஷ் க்ளாஸ் என பல விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் இங்கிலிஷ் க்ளாசில் பழனிச்சாமி உடன் நெருங்கி பழகி வருவதை பற்றி கோபி ஏற்கனவே பிரச்சனையை கிளப்பி வருக்கிறார். ஆனால் பாக்யா அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பழனிச்சாமியின் அம்மா ஒரு விஷயத்தை பேசுகிறார். பாக்யா வீட்டுக்கு சென்று பெண் கேட்க போவதாக அவர் கூறுகிறார். ஆனால் பழனிச்சாமி அதை வேண்டாம் என கூறிவிடுகிறார். இதைத்தொடர்ந்து பாக்யாவின் மறுமணம் குறித்த காட்சிகள் தான் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…