நடிகர் டெல்லி கணேசனின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

By Samrin

Published on:

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் டெல்லி கணேஷ். இவர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி  1994 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

   

இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர். 10 வருடங்களாக விமானப்படையில் பணியாற்றினார்.

இவர் 1976 ஆம் ஆண்டு  கே .பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘பட்டின பிரசவம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் .உலகநாயகன் கமலஹாசன் உடன் நடித்து வெளிவந்த ‘நாயகன்’ படத்தின் மூலமாக மக்களின்  கவனத்தை ஈர்த்தார்.

இவர் தமிழில் போக்கிரி ராஜா ,காதல் கதை, ஆயிரம் விளக்கு, கருவறை, அவ்வை சண்முகி ,என பல படங்களில் நடித்துள்ளார்.

1976 இல் இருந்து தற்போது வரை 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்காக உயிரைக் கொடுத்து கூட நடிப்பார்.

இவர் வில்லன், கதாநாயகன், காமெடியோ,  சீரியல் கேரக்டரோ எதுவாக இருந்தாலும் இவர் தன் முழு உழைப்பையும் தந்து  நடிப்பார்.

இவர் நடிப்புத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் மேலாகிவிட்டது என்பதால் இவருக்கு திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் முன்னணி நடிகர்களாக வலம் வரும்  ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, சித்தார்த் என்று அன்று முதல் இன்று வரை அனைத்து நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்.

இவர்  சினிமா துறையில் ஒரு பாட புத்தகம். இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் ,கஸ்தூரி போன்ற சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மழலைப் பட்டாளம்’ என்ற படத்தில் விஷ்ணுவர்தனுக்கு டப்பிங் செய்துள்ளார். ’47 நாட்கள்’  என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு டப்பிங் செய்துள்ளார்.

நடிகர்டெல்லி கணேஷ்  தனது அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தையும் ,மகாதேவன் என்ற மகனும் உள்ளார்.இவருக்கு பேரன் ,பேத்திகளும் உள்ளனர்.

இவரது  மகன் மகாதேவன் விக்ரம் படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார். இவரின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது.