ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் சந்திரமுகி யார் தெரியுமா?… அடடே இவரா?… வைரலாகும்  லேட்டஸ்ட் அப்டேட் இதோ…

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் சந்திரமுகி யார் தெரியுமா?… அடடே இவரா?… வைரலாகும்  லேட்டஸ்ட் அப்டேட் இதோ…

இயக்குனர்  பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான்  சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துக் கொண்டு வருகிறார் .’சந்திரமுகி 2′  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தினை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா, பிரபல மலையாள நடிகை மஹிமா நம்பியார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா தான் சந்திரமுகியாக நடித்து மிரட்டி இருப்பார்.

அது போல இரண்டாம் பாகத்தில் யார் சந்திரமுகியாக நடிப்பது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அது பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்து வருகிறாராம், அவரது காட்சிகள் எல்லாம் பிளாஷ்பேக்கில் தான் வரும் என கூறப்படுகிறது.அதனால் ஜோதிகாவுக்கு இணையாக தனக்கும் சந்திரமுகி ரோலில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என லட்சுமி மேனன் நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது.

Begam