இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை தீபிகா படுகோன். ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 30 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
2024 ஆம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் முதலிடத்தை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிடித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து ஆலியா பட், கங்கனா, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஐஎம்டிபி-யின் உதவியுடன் ஃபோர்ப்ஸ் தொகுத்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல் வெளியானது.
அதில் தீபிகா ஒரு திரைப்படத்திற்கு 15 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் பெறுகின்றார். அதற்கு அடுத்ததாக ஒரு படத்துக்கு 15 கோடி முதல் 27 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். தற்போது அரசியல்வாதியாக அவர் மாறி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இவர் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
நான்காவது இடத்தில் கத்ரீனா கைஃப் 15 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். நடிகை ஆலியா பட் ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி இடத்தை பிடித்திருக்கின்றார். கரீனா கபூர் ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 18 கோடி வரையும், சரிதா கபூர் ஏழு கோடி முதல் 15 கோடி வரையும், வித்யா பாலன் ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 14 கோடி வரையும் சம்பளம் வாங்குகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் கேட்கின்றார். தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் இருவரும் தான் தற்போது பெரிய பட்ஜெட் படங்களை கையில் வைத்திருக்கிறார்கள். நடிகை தீபிகா படுகோன் கல்கி 2898 ad என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதில் தீபிகாவின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. மேலும் ஆலியா பட் இந்த ஆண்டு வெளியாக உள்ள முக்கிய படங்களில் ஒன்றான ஜிக்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அதைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலியுடன் மற்றொரு திரைப்படத்திலும் ஆலியா பட் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.