“3 முறை கருக்கலைப்பு.. 5 வருசமா ஏமாத்திட்டாங்க”… முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி மீண்டும் பகீர் புகார்….!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மீண்டும் அதிரடியாகப் புகாரளித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டில் மணிகண்டன் தரப்பில் தனக்கு சொத்துகளும் பணமும் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை நம்பியே மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தான் சமரசத்திற்கு உடன்பட்டதாகவும் சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்தும் இதுவரை தனக்கு பணமோ, சொத்தோ தராமல் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதுகுறித்து தற்போது நியாயம் கேட்டால் முன்னாள் அமைச்சர் தனது வழக்கறிஞர்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.