தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இவர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்தத் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா என்ற ஒரு டயலாக் மூலமாக ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் பக்கம் கட்டி போட்டவர் இவர்தான்.
இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் கணிதன்,கலகலப்பு 2 மற்றும் அருவம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இருந்தாலும் மெட்ராஸ் திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு படங்களில் திடீரென கவர்ச்சி கன்னியாக வலம் வரத் தொடங்கினார்.
இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சியாக தான் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கேத்ரின் வெளிநாட்டில் ஷார்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.