முத்த காட்சியா ஐயோ ஆள விடுங்க சாமி.. அந்த படத்தில் கமலுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை…!

By Nanthini on தை 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ஜெயஸ்ரீ. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளியான தென்றலே என்னை தொடு என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நான்கு ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னாடி நடிகை என்ற பெயரை பெற்றார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து வெளிநாட்டில் செட்டிலாக நினைத்த இவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியது.

கமல் கூட நடிக்க முடியாது.. ரஜினி கிட்ட அட்வான்ஸை திருப்பி கொடுத்துடுங்க..  பிடிவாதமாக இருந்த நடிகை..! - Update News 360 | Tamil News Online

   

குடும்பத்தினர் படிப்பு முடிந்து திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் ஜெயஸ்ரீயை பார்த்ததும் அவருடைய தாயாரிடம் சென்று படத்தில் ஹீரோயினியாக நடிக்க சம்மதம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த குடும்பத்தினர் பிறகு ஒப்புக்கொண்ட நிலையில் சினிமாவில் நடித்ததால் படம் புகழ் வரும் என்று கூறியதும் ஒப்புக்கொண்டனர். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஜெயஸ்ரீக்கு 1989 ஆம் ஆண்டு அமெரிக்கா மாப்பிள்ளை வரன் வந்தது. அப்போது கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை மன்னன் திரைப்படத்தில் முதலில் ஜெயஸ்ரீ தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுடன் முத்த காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதால் ஜெயஸ்ரீ வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.

   

Aval Vikatan - 21 January 2020 - 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் 26: அன்று  நடிகை... இன்று புராஜெக்ட் மேனேஜர்!| 1980s evergreens heroins - actress  Jayashree - Vikatan

 

 

இதனால் வேறொரு நிகழ்ச்சியில் கமிட் ஆகியதால் கமல்ஹாசன் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக ஜெயஸ்ரீ பல பேட்டிகளில் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குனர் பாலசந்தர் எவ்வளவு சொல்லியும் மறுப்பு தெரிவித்த ஜெயஸ்ரீ அதன் பிறகு ரஜினிகாந்த் படமான குரு சிஷ்யன் என்ற திரைப்படத்திலும் கௌதமி ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அப்போது வாங்கி அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு நடிக்க முடியாது என கூறிவிட்டார். ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை ஜெயஸ்ரீயை பார்க்கும்போதும் நீதான் என் படத்தில் நடிக்க மறுத்த முதல் நடிகை என்று கிண்டல் செய்வாராம். அதன் பிறகு அமெரிக்க வங்கி அதிகாரியான சந்திரசேகர் என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி ஜெயஸ்ரீ தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.