சினிமாவை பொருத்தவரையில் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்து காலப்போக்கில் தங்களுடைய வாழ்க்கை பாதையை மாற்றிக் கொண்டுள்ளனர். அதற்கு மிகப்பெரிய உதாரணம் நடிகை மும்தாஜ். அவர் தன்னுடைய பாதையை முழுமையாக மாற்றி ஆன்மீகத்தை நாடியுள்ளார். நடிகை மோனிகாவும் அப்படிதான். அதன்படி தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் புவனேஸ்வரி. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான கந்தா கடம்பா கதிர்வேலா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் புவனேஸ்வரி. இந்தத் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன்படி பிரியமானவளே மற்றும் பட்ஜெட் பத்மநாதன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. வெள்ளி திரையைத் தாண்டி சின்னத்திரையில் கோகுலம் வீடு, சித்தி, சொர்க்கம் மற்றும் ராஜ ராஜேஸ்வரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு ரீச் கொடுத்தது பாய்ஸ் திரைப்படம் தான்.

இவர் 18 வருடங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதாவது இவர் பாலியல் தொழில் செய்வதாக பிரச்சனைகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இவ்வாறு சினிமாவில் இருந்து விலகி விட்டார். இப்படியான நிலையில் தற்போது புவனேஸ்வரி ஆன்மீகப் பாதையில் பயணித்து வருவதாக அவரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் 15 வயசு இருக்கும் போதே நடிக்க வந்துட்டேன். என்னோட குடும்பத்துல பெரியப்பா சித்தப்பா என்று மிகப்பெரிய கூட்டமே இருக்கும். குடும்பத்துக்காகவே சின்ன வயசுல இருந்து என்னுடைய எல்லா சந்தோஷத்தையும் தொலைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன்.

ஒரு கட்டத்துல காதல் திருமணம் பண்ணிக்கிட்ட நான் அவரோட அன்புக்காக ஏங்கின. ஒரு கட்டத்துல அவரும் அந்த அன்பு கொடுக்காம விட்டுட்டு போயிட்டாரு. அதுக்கு அப்புறம் என்னோட பையனுக்காக என்னுடைய வாழ்க்கையை தொடங்க ஆரம்பிச்சேன். என்னுடைய வாழ்க்கையில எந்த ஒரு இடத்திலையும் என்னோட சந்தோசத்துக்காக நான் வாழவே இல்ல. அன்னைக்கு குடும்பத்துக்காக கஷ்டப்பட்ட இன்னைக்கு ஆன்மீக வழியில் மக்களுக்காக பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் நிறைய துரோகங்களை தான் நான் சந்தித்துள்ளேன்.

ரசிகர்கள் என்னை சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் பார்த்திருப்பார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தேன். நான் தற்போது இருப்பது ஆன்மீகப் பாதையில் உள்ளேன். நடித்துக் கொண்டிருக்கும்போதே ஆன்மீகத்தில் தான் இருந்தேன். இப்போது நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கியுள்ளேன். நான் இந்த ஆன்மீகப் பாதைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று புவனேஸ்வரி எமோஷனலாக அந்த பேட்டியில் பேசியுள்ளார். அதேசமயம் புவனேஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வர இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாய்ஸ் பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
