காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அதுல்யா ரவி. அதன் பிறகு ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனி ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதை பார்த்து ரசிகர்கள் அதுல்யா ராவின் முகம் முன்பு போல இயற்கையாக இல்லை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருக்கிறது என்று கமெண்ட் செய்து வந்தார்கள். இந்த நிலையில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற படம் நிகழ்ச்சியில் பேசிய நடிகை அதுல்யா ரவி, “நான் முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் நான் சர்ஜரி எதுவும் செய்யவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
