புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் மரிக்கொழுந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அஸ்வினி நம்பியாரின் தற்போதைய புகைப்படம் இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட வாய்ப்பு குறைந்த உடன் திருமணம், குழந்தை என்று செட்டிலாகி விடுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் சினிமாவில் தலை காட்டுவதே கிடையாது. ஒரு சில நடிகைகள் சீரியல் பக்கம் சென்று விடுகிறார்கள். அப்படி சென்றவர் தான் அஸ்வினி நம்பியார்.

1991 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த மரிக்கொழுந்து தான் இவர் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் முதன்முதலாக நடித்த இவர் மரிக்கொழுந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் கவர்ந்தார். தன்னுடைய அழகாலும், சிறப்பான நடிப்பாலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கிழக்கு சீமையிலே, தூரத்து சொந்தம், புதுப்பட்டி பொன்னுத்தாயி, ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக அவர் நடித்த தமிழ் திரைப்படம் கிழக்கு சீமையிலே. இந்த திரைப்படத்தில் விக்னேஷுக்கு ஜோடியாக ஆடிய ஆத்தங்கர மரமே என்ற பாடல் இப்போதும் பலரின் ஃபேவரிட் ஆக இருக்கின்றது.
தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு ,கன்னட சினிமாவிலும் நடித்து வந்த இவர் தற்போது சிங்கப்பூரில் போய் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்கு வந்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் தான் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கோமதி என்கின்ற கேரக்டரில் நடித்து வந்த இவர் பின்னர் அந்த சீரியலை விட்டும் விலகி விட்டார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய அஸ்வினி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த நடிகையா இது? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
