இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் ‘அருந்ததி’ திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா.
இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது. தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனுஷ்கா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தன்னுடைய அம்மாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படமானது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…