Categories: சினிமா

43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக  இருக்கும் அனுஷ்கா..!

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் ஸ்வீட்டி ரெட்டி. 2005 ஆம் ஆண்டு பூரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த அனுஷ்கா சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இரண்டு திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு வேட்டைக்காரன், சிங்கம், என்னை அறிந்தால், லிங்கா உள்ளிட்ட அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.

நடிகை அனுஷ்காவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது அருந்ததி மற்றும் பாகுபலி தான். அதிலும் தேவசேனா கதாபாத்திரம் இன்றளவும் இவரை பாப்புலராக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அதை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் உடல் எடையை அதிகரித்து பின்னர் குறைக்க முடியாமல் போனதால் அவரின் மார்க்கெட் தொடர்ச்சியாக சரிவை சந்தித்தது. தற்போது தெலுங்கிலும் மலையாளத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி காதல் கிசு கிசுவில் சிக்கிக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு 43 வயது ஆகின்றது. அது மட்டும் இல்லாமல் பிரபாஸை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கூறிவந்த நிலையில் அதனை மறுத்துவிட்டனர்.

என்னதான் மார்க்கெட் இழந்தாலும் சொத்து மதிப்பில் டாப்பில் இருக்கின்றார் அனுஷ்கா. அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 130 கோடியாகும். ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர் விளம்பர படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குகின்றார். சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேல்களிலும் பல கோடிகள் அவர் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Mahalakshmi

Recent Posts

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

24 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

28 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

31 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

37 minutes ago

“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…

43 minutes ago