பெரிய நயன்தாராவை தூக்கி சாப்பிடும் குட்டி நயன்.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். இவர் தமிழில் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தார். பார்ப்பதற்கு நயன்தாராவை போலவே இருப்பதால் ரசிகர்கள் அனிகாவை குட்டி நயன்தாரா என அழைக்கின்றனர்.

   

அஜித்தின் ரீல் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தில் அனிகா ஹீரோயினாக களமிறங்கினார். அதன் பிறகு மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் நடித்தார்.

அனிதா வயசுக்கு மீறிய காட்சிகளில் நடிப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ராயன் படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் துஷாராவின் தங்கையாக அனிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனிகா தற்போது வெள்ளை நிற புடவை அணிந்து கொண்டு மாராப்பை சரிய விட்டு போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கிளாமரில் நயன்தாராவையே அனிகா மிஞ்சிடுவார் போலையே கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram