தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை அம்மு அபிராமி. 24 வயதாகும் இவர் பைரவா, என் ஆளோட செருப்ப காணோம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
ஆனால் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் அசுரன் திரைப்படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் வந்து தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். ஹீரோயினியாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இவர் நடித்து வருகின்றார்.
அதன்படி இவர் நடித்த கண்ணகி, ஹாட்ஸ்பாட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது மெய்ப்பட, யார் இவர்கள் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் . இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
அதன்படி தற்போது மாடர்ன் லுக்கில் புகைப்படங்களை இவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில்ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இருந்தாலும் அமுல் பேபி போல இருக்கும் இவரை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…
பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…