#image_title
விவேக் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியராக பணியாற்றியவர். ஊட்டி கான்வென்டில் பள்ளி படிப்பையும் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிகாம் பட்டமும் பெற்றவர் விவேக். முறைப்படியாக பரதநாட்டியம் பயின்றவர் விவேக். தனது சகோதரியுடன் இணைந்து பல மேடைகளில் நாட்டியமாடியுள்ளார். ஆர்மோனியம் வயலின் தபேலா போன்ற இசைக்கருவிகளையும் பயின்று அருமையாக இசைக்கக்கூடியவர் விவேக்.
மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த விவேக் மதுரையில் நடைபெற்ற ஒரு பரதநாட்டிய போட்டியில் பங்கேற்றினார். இதன் இறுதிப் போட்டி கலாகேந்திராவில் நடக்கும் போது கே பாலச்சந்தர் அவர்களின் அறிமுகம் விவேக்கிற்கு கிடைத்தது. இவரது நடனத்தையும் மிமிக்ரியும் பார்த்த கே. பாலச்சந்தர் 1987 ஆம் ஆண்டு தனது மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்தார். பின்னர் 1990களில் துணை நடிகராக தமிழ் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார் விவேக்.
படிப்படியாக நகைச்சுவையாக பேசி நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆனார் விவேக். பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோக்களின் நண்பனாக கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, நம்ம வீட்டு கல்யாணம், தூள் ஆகிய படங்களில் இவரின் நகைச்சுவை வெகுவாக பாராட்டப்பட்டது ஆகும்.
விவேக் நகைச்சுவையில் பெரிதும் அடுத்தவர்களை இழிவுபடுத்த மாட்டார். இவரது நகைச்சுவையில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள் மூடநம்பிக்கைகள் லஞ்சங்கள் அரசியல் ஊழல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து நகைச்சுவை மூலமாகவே உரக்க சொல்லி இருப்பார் விவேக். இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அன்போடு அழைத்தனர். இவர் தான் உயர்ந்தது மட்டுமல்ல பல சிறிய சிறிய நடிகர்களையும் தன்னால் முடிந்த அளவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்து உயர்த்தி இருக்கிறார் விவேக்.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் தீவிர ரசிகனான விவேக் அவர் சொல்படி ஏகப்பட்ட மரங்களை தன் வாழ்நாளில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து செய்ய சொல்லி தன் வழி வந்தவர்களுக்கும் அறிவுத்திருக்கிறார். இவர் தனது நடிப்பிற்காக பத்மஸ்ரீ பிலிம் பேர் தேசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வென்றிருக்கிறார் விவேக். விவேக் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதர் என்று இவரைப் பற்றி சினிமா வட்டாரங்கள் அனைத்தும் தெரிவிக்கின்றது. சினிமா துறையில் தனித்துவமான நல்ல பங்களிப்பை அளித்த விவேக் 2021 ஆம் ஆண்டு காலமானார்.
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…