கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாக இருந்தேன்.. நடிகை அமலாபால் விளக்கம்..!!

By admin on ஆவணி 11, 2024

Spread the love

பிரபல நடிகையான அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஆர்யா ஆகியோருடன் இணைந்து அமலாபால் நடித்துள்ளார். தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அமலாபால் நடித்தார். அப்போது இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

   

 

   

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அமலாபால் ஏ.எல். விஜய் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை அமலபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 2 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் அறிவித்தார்.

 

Actress Amala Paul

அந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அமலா பால் தனது குழந்தைக்கு இலை என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் அமலாபால் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தேன். அதனால்தான் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். நான் முதலில் ஹீரோயின் என்பது எனது கணவருக்கு தெரியாது.

முதல் வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்ததால் இரண்டாவது அமையும் வாழ்க்கை மீது எனக்கு மிகவும் தயக்கம் இருந்தது. ஆனால் எனது கணவர் அனைத்தையும் மாற்றிவிட்டார். நாங்கள் லிவிங் டுகதர் வாழ்க்கையில் இருந்தோம். டேட்டிங் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே நான் கர்ப்பமாகி விட்டேன். இதனால் உடனடியாக திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.

ஆண் குழந்தைக்கு தாய் ஆனார் அமலா பால்: 'இலை' என பெயரிட்டுள்ளதாக அறிவிப்பு! |  Amala Paul, Jagat Desai become proud parents to baby boy - hindutamil.in