பாளையத்தம்மன் படத்தில் நடித்த குழந்தையா இது..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By admin on ஆவணி 11, 2024

Spread the love

குழந்தை நட்சத்திரமாக ராஜகாளியம்மன், பாளையத்தம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அக்ஷயா ஜெயராம். சமீபத்தில் அக்ஷயா ஜெயராம் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக இருந்த அக்ஷயாவா இப்போது எப்படி இருக்கிறார் என ஆச்சரியத்தில் உள்ளனர். தற்போது அக்ஷயா ஜெயராம் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார்.

   

அக்ஷயா ஜெயராம் சிறுபிள்ளையாக இருந்த போது அவரது வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வந்துள்ளனர். செல்லப்பிராணிகளை கவனித்துக் கொண்ட குடும்ப டாக்டர் பிக்னிக் சென்றபோது புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரது நண்பரான ராமநாராயணன் பார்த்துவிட்டு 3 1/2 வயதான அக்ஷயாவை படத்தில் நடிக்க வைக்க நினைத்துள்ளார். அக்ஷயாவின் பெற்றோரும் சாமி படம் தானே நடிக்கட்டும் என அனுமதி அளித்துள்ளனர்.

   

 

இதனை அடுத்து பள்ளி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சில படங்களை நடித்து முடித்த பிறகு அக்ஷயாவின் பெற்றோர் அவரை சினிமா துறைக்கு அனுப்பவில்லை. அவர் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். முதலில் எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் என்பது அக்ஷயாவுக்கே தெரியாதாம். ஒருமுறை அக்ஷயா அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை நட்சத்திரமான அக்ஷயா ஜெயராமுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர்.

மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அக்ஷயா ஜெயராம் சினிமாவில் நடிக்க எண்ணம் வரவில்லை. ஏற்கனவே சிலர் சினிமாவில் நடிக்க அப்ரோச் செய்தார்கள். அதனை நான் நிராகரித்து விட்டேன். சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title