தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2021 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதனைப் போலவே விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி மற்றும் தர்மதுரை ஆகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்நிலையில் தன்னிடம் பொதுவெளியில் ஒருவர் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக சமீபத்திய ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். நான் கல்லூரி படிக்கும்போது எனது தோழி வீட்டுக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.
அப்போது ஒரு நபர் எனது பக்கத்தில் வந்து ஒரு கட்டத்தில் என் மீது அங்கு கை வைத்து விட்டார். உடனே அதிர்ச்சியான நான் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு அந்த ஆட்டோக்காரரிடம் என்ன அண்ணா இது போன்ற ஆட்களை எல்லாம் ஆட்டோவில் ஏற்று இருக்கிறீர்கள் எனக் கேட்டேன். உடனே அந்த ஓட்டுனர் என் மீது கை வைத்த அந்த நபரை கடுமையாக திட்டி விட்டு ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டார் என்று தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…