24 வருஷமா என் கூட இருக்காரு, இன்னும் அது மட்டும் வர மாட்டுது.. வீடியோ வெளியிட்டு கலாய்த்த அபிராமி..!!

By Nanthini on ஆவணி 13, 2024

Spread the love

தமிழில் பட்ஜெட் பத்மநாபன் மற்றும் விருமாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை அபிராமி. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதா புருஷன் என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். தான் கல்லூரியில் படிக்கும் போதே சின்னத்துறையில் தொகுப்பாளினியாக இருந்த அபிராமிக்கு பத்ரம் படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

   

தொடர்ந்து அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி அதன் பிறகு சமுத்திரம், கார்மேகம் மற்றும் சமஸ்தானம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். குறிப்பாக 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அபிராமி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 29ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளரான பவணனின் பேரன் ராகுல் பவணனை திருமணம் செய்து கொண்டார்.

   

 

திருமணத்திற்கு பிறகு படங்களில் அதிகம் நடிக்காமல் சினிமா துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு ஜோதிகாவின் 36 வயதினிலே திரைப்படத்தில் கெஸ்ட் ரோடில் நடித்து மீண்டும் ரீ என்று கொடுத்தார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் அபிராமி தன்னுடன் 24 வருடமாக இருக்கும் மேக்கப் மேன் பிரசாத் இன்னும் சரியாக தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க தெரியவில்லை என்று கூறி அவரை வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhirami இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@abhiramiact)