தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் ரஜினி. இவர் தன்னால் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு விதத்திலும் நஷ்டம் வந்து விடக்கூடாது என்று எப்போது நினைப்பவர். அதனால் தான் இன்றும் சிங்கம் மாதிரி திரை உலகில் உலா வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரஜினி பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில், தங்க மகன் என்ற படத்தில் ரஜினி நடிக்கும் போது உடம்பு சரியில்லாமல் மூன்று மாதம் சிகிச்சையில் இருந்தார்.

பிறகு உடல்நிலை தேறி கால் சூட் கொடுத்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினிக்கு தரவேண்டிய பாக்கி தொகையை சத்யஜோதி தியாகராஜன் ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்று கொடுத்தார். அப்போவே பத்து லட்சத்திற்கு மேல் கொடுத்தார். மூன்று நாட்கள் கழித்து ரஜினியின் நண்பர்கள் இருவர் ஆர் எம் வீரப்பன் வீட்டிற்கு வந்தனர். தியாகராஜன் கொடுத்த பெட்டியுடன் ஆர் எம் வீரப்பன் வீட்டிற்கு சென்றனர்.

ஐயா நீங்க இத வச்சுக்கோங்க என்று கூற, உடனே ரஜினி சாரோட சம்பளத்தை தானே கொடுத்தேன் என்று தியாகராஜன் கூறினார். இல்ல வேண்டாம், அந்த மூன்று மாதம் உடம்பு சரியில்லாமல் இருந்தபோது எவ்வளவு வட்டி நஷ்டம் ஏற்பட்டிருக்கும். செலவு எவ்வளவு ஆகிறது? அதுக்காக இந்த பணத்தை நீங்களே வச்சிக்கோங்க என்று கூறி ரஜினி அதனை திருப்பிக் கொடுத்து விட்டார். ரஜினியின் இந்த குணத்தை கே.ராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
