Categories: சினிமா

இந்த ரெண்டு பேரும்?… Indigo விமான ஊழியர்களின் புகைப்படத்தை பகிர்ந்து நன்றி கூறிய நடிகை அபிநயா….

Spread the love

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். கேட்கும் திறனின் சற்று குறையுள்ள இவர் தன்னுடைய 17 வயதில் நடிக்க தொடங்கினார். நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு ஈசன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட விஷாலும் இவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அபிநயா மறுப்பு தெரிவித்து விட்டார். தற்பொழுது இவர் விஷாலின் மனைவியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை அபிநயா வாய் பேச இயலாதவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தான் எப்பொழுதும் Indigo விமானத்தில் தான் பயணம் செய்வதாகவும், தன்னைப்போல வாய் பேச இயலாத இரண்டு ஊழியர்களை Indigo நிறுவனம் வேலைக்கு அமர்த்தியதற்கு நன்றி கூறியும், அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் கூறி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

3 minutes ago

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

31 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

2 மணத்தியாலங்கள் ago