தமிழ் சினிமா கருப்பு வெள்ளையாக இருந்தபோது எம்ஜிஆர் சிவாஜி நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் அவர்களது சம்பளம் சில ஆயிரங்களாக தான் இருந்தது. அதன்பின், அவர்கள் வளர, தமிழ் சினிமாவும் அபரிமிதமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் லட்சங்களில் சம்பளம் பெறும் நிலைக்கு எம்ஜிஆர் சிவாஜி உயர்ந்தனர். ரூ. 10 லட்சம், ரூ. 20 லட்சம் தான் அவர்கள் பெற்ற உச்சக்கட்ட சம்பளமாக இருந்தது.
![]()
முதன்முறையாக சிவாஜி கணேசனுக்கு ரூ. ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கியவர் நடிகர் ரஜினிகாந்த் தான். படையப்பா படத்தில் நடித்ததற்காக ரஜினியே, சிவாஜியின் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி வழங்கினார். நடிப்பு பல்கலைக் கழகம் என்றழைக்கப்படும் சிவாஜியே பெற்ற அதிக சம்பளம் அதுதான். தேவர் மகன் படத்தில் நடித்த சிவாஜிக்கு, கமல் கொடுத்த சம்பளம் ரூ. 20 லட்சம்தான். இந்நிலையில் இப்போது நடிகர்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க கமல், 25 நாட்களுக்கு ரூ. 125 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

தசெ ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடித்துவரும் வேட்டையன் படத்தில் ரஜினி சம்பளம் ரூ. 110 கோடி, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தில் ரஜினி சம்பளம் ரூ. 120 கோடி, விடாமுயற்சி படத்தில் அஜீத் பெற்ற சம்பளம் 120 கோடி ரூபாய். விஜய் நடித்த லியோ படத்துக்கு பெற்ற சம்பளம் 120 கோடி ரூபாய், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் எனத் தெரியவந்துள்ளது.
தங்கலான் படத்துக்க சியான் விக்ரம் ரூ. 15 கோடி, கங்குவா படத்துக்கு சூர்யா ரூ. 30 கோடி, விஜய் சேதுபதி ரூ. 30 கோடி, கேப்டன் மில்லர் படத்துக்கு நடிகர் தனுஷ் 50 கோடி சம்பம் பெற்றதாக பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
