என்னது.. சூர்யா, கார்த்தியை வச்சு நான் இப்படி ஒரு விஷயம் பண்ண நினைச்சனா?.. இயக்குனர் அமீர் பகிர்ந்த உண்மை..!!

By Nanthini on மார்கழி 9, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனராகத் திகழும் அமீர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானபோது சூர்யா கேரியரில் அது முக்கியமான படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா ஹீரோவாக நடித்த ராம் திரைப்படத்தை அமீர் இயக்கி இருந்தார். பின்னர் இவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இந்திய திரை உலகை திரும்பி பார்க்க வைத்தது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்த படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று கூறலாம். தற்போது பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த பட விவாகரத்தில் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே ஆன மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

   

இந்த நிலையில் இயக்குனர் அமீர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சில தகவல்களை அமீர் பகிர்ந்து கொண்ட நிலையில், பருத்திவீரன் திரைப்பட வெளியீட்டுக்கு பிறகு சூர்யா அவர்களும் கார்த்தி அவர்களும் எனக்கு தேதி தருவதாக சொன்னதாகவும் அதற்காக அவர்கள் என்னை பலமுறை தொடர்பு கொண்டதாகவும், அவர்களை வைத்து படம் தயாரித்து நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று சிவக்குமார் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவலை கூறியுள்ளீர்கள்.

   

 

பருத்திவீரன் திரைப்பட வெளியீட்டுக்கு பிறகு அப்படி எந்த ஒரு நிகழ்வும் இதுவரை நடைபெறவில்லை. யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை யாரும் என்னை சந்திக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. நான் திரைத்துறைக்கு வந்த நாள் முதலே பிரபல நடிகர்களை சந்தித்து அவர்களிடம் தேதி வாங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றைக்கும் ஏற்பட்டது இல்லை என்று அமீர் வெளிப்படையாக பேசியுள்ளார்.