பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகள் மாளவிகாவின் நிச்சயதார்த்தம்… வெளியான புகைப்படங்கள்…

By Begam on டிசம்பர் 9, 2023

Spread the love

‘கோகுலம்’ எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயராம். இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

அந்தவகையில் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும், ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் நந்தினியின் சகோதரர் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில், ஜெயராம் மற்றும் கார்த்தியின் காம்பினேஷன் சீன்கள் பலவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. நடிகர் ஜெயராம், 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் பிரபல நடிகையாக வலம் வந்தவர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் ஜெயராமின் மகன், இளம் நடிகர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர் பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் கூட மிரட்டலான கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

தற்பொழுது நடிகர் ஜெயராமின் மகளான மாளவிகாவிற்கு நிச்சயம் முடிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…