காதலுக்கு எதிர்ப்பு… சினிமா பாணியில் காரில் கடத்திச் சென்று சீதாவை திருமணம் செய்த பார்த்திபன்..

By vinoth on மார்ச் 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் இந்த காதலுக்கு சீதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

   

இதனால் அவரைக் கடத்திக்கொண்டு சென்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இதனால் சீதாவின் வீட்டின் முன்னர் தன்னுடைய நண்பர்கள் இருவரைக் காவலுக்கு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது சீதா ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள செல்ல இருந்த நிலையில் அவரை அழைக்க வரும் காருக்கு பதில் தங்களுடைய காரையும், அதில் தன் நண்பர்களையும் அனுப்பி வைத்துள்ளார் பார்த்திபன்.

   

அவர்கள் சீதாவை ஷூட்டிங்குக்கு அழைத்து செல்வது போல பார்த்திபனின் நண்பர் வீட்டுக்கு அழைத்து செல்ல அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இப்படி சினிமா பாணியில் அவர்கள் திருமணம் விறுவிறுப்பாக நடந்துள்ளது.

 

அதன்பின்னர் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்த பார்த்திபன் சீதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் பார்த்திபனும் சீதாவும் விவாகரத்து செய்து பிரிந்தனர். திருமணம் தன் வாழ்வில் தான் எடுத்த ஒரு மோசமான முடிவு என்று பின்னாளில் சீதா தெரிவித்துள்ளார்.

ஆனால் மகளின் திருமணத்தை இருவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பார்த்திபன் மற்றும் சீதா இருவருமே சினிமாவில் நடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.